தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! – பெரியார் ஈ.வெ.இராமசாமி
தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! “பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன். ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை;…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: தொடர்ச்சி) 12 1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல்…