விகித அடிப்படையிலான சார்பாளர் முறை என்றால் என்ன? – விடுதலை இராசேந்திரன்
விகித அடிப்படையிலான சார்பாளர் முறை (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை) என்றால் என்ன? தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு இட்டுள்ளது. அதைத் தாண்டி, கணக்கில் காட்டாமல் கோடிக் கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை எனப் பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்கிற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகித அடிப்படையிலான சார்பாளர் முறை’ (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை)…
திராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு! – குளத்தூர் மணி
திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்! ‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள். பகலவன்: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்! குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது…
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 3/3 – வாலாசா வல்லவன்
(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 தொடர்ச்சி) 3/3 15-2-1953 சென்னை மாவட்டத் திராவிடர் கழகச் செயற்குழு 22-2-1953 அன்று சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது.(விடுதலை 16-2-1953). அன்றே திராவிடர் கழக நடுவண் செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்து சென்னைக்கு வரும் அன்றே ‘தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்’ தமிழகமெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறைவேற்றியது. (விடுதலை 16-2-1953). திட்டமிட்டபடி இராசேந்திரப் பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 – வாலாசா வல்லவன்
(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 தொடர்ச்சி) 2/3 ஆந்திராச் சிக்கல் குறித்து திராவிடர் கழக நடுவண் மேலாண்மைக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்: (அ) ஆந்திர நாடு பிரிவினையில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிப்பதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்குழு தெரிவித்துக் கொள்ளுகிறது. அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது ஆளுநர் முதலியவை சென்னையிலிருக்க…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 – வாலாசா வல்லவன்
1/3 வழக்கறிஞர் பா.குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்கிற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் வரலாற்றுப் பொய்கள் பலவற்றையும் வரலாற்றுத் திரிபுகள் பலவற்றையும் செய்துள்ளார், அவர். அண்மைக் காலமாக ம.பொ.சி-யின் அடியாராக மாறியுள்ளதால், ம.பொ.சி.யின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது மாணவக் கோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரிய வேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ள…