காலப்பொறி படைத்தவர் தமிழரே!
காலப்பொறி படைத்தவர் தமிழரே! “யாண்டும், மதியும், நாளும், கடிகையும்” எனவரும் சிலப்பதிகார அடிகளால் நாழிகையை அளவிடும் கருவி ‘கடிகை’ என அழைக்கப்பட்டதை அறியலாம். இக்கடிகை ‘ஆரம்’ போல் கழுத்தில் அணியப்பட்ட செய்தி “கடிகை ஆரம் கழுத்தில் மின்ன” என்னும் பெருங்கதை வரியால் அறியப்படுகிறது. இக்கடிகை ஆரமே இப்பொழுது கடிகாரம் எனப்படுகிறது. மேலும், ‘கன்னல்’ என்னும் கருவி மூலம் நேரம் கணக்கிடப்பட்டதை முல்லைப்பாட்டின் மூலம் அறியலாம். நமது நாழிகை வட்டில் பிற நாட்டவராலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய, ஒன்றரை மணி நேர அளவுகொண்ட முழுத்தம் என்பதே…
காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்
(வைகாசி 25, 2045 / சூன் 08, 2014 இதழின் தொடர்ச்சி) 83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி – பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67 84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய் நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்) – பெரியபுராணம்: பாயிரம் 3 85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள், கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில் – பெரியபுராணம்: 1….
காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82
(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) 50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம் 24-25 51. மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம் 97-98 52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139 53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டுஇனிது…