தமிழ் வாழும்அன்றே! – பெருஞ்சித்திரனார்
‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! ! தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும் கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது ! ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே ! பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது: பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:” எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும், தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’…
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்: மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…
பெருஞ்சித்திரனார் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு
பெருந்தகையீர், அனைவரும் வருக! தமிழ்த்தேசத்தந்தை பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு அனைவரும் வருக! நாள்: மாசி 30, 2047 / 13-3-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு தலைமை: முனைவர்மா.பூங்குன்றன் வரவேற்புரை: திரு.தழல் தேன்மொழி சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார் திரு.அன்புவாணன், பொதுச்செயலர்(உ.த.மு.க) நன்றியுரை: தோழர்.இளமுருகன் ஒருங்கிணைப்பு: தென்மொழி இயக்கம் இடம்: பாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை-100 தொடர்புக்கு: 9444440449, 9443810662.
நூல் அறிமுகம்: “பெரியார்”
நூல் அறிமுகம்: “பெரியார்” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 31 அறிவுத்தேடல் அறிவு <arivuththaedal@gmail.com> நூல்: பெரியார் நூலாசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார் வெளியீடு: தென்மொழி பதிப்பகம் பாவலரேறு தமிழ்க்களம் எண்- 1, வடக்குப்பட்டுச் சாலை மேடவாக்கம் கூட்டுச் சாலை சென்னை – 600 100 பேசி: 94444 40449 94438 10662 பக்கங்கள் 120 விலை: உருவா 50 அறிவுத்தேடல் வலைப்பூ http://arivuththaedal.blogspot.in/2015/07/blog-post_10.html
பைந்தமிழில் படிப்பது முறை ! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பழந்தமிழ் நாட்டில் பைந்தமிழ் மொழியில் படிப்பதுதானே முறை? இழந்தநம் உரிமை எய்திடத் தடுக்கும் இழிஞரின் செவிபட, அறை! கனித்தமிழ் நிலத்தில் கண்ணெனுந் தமிழில் கற்பது தானே சரி! தனித்தமிழ் மொழியைத் தாழ்த்திய பகையைத் தணலிட் டே, உடன் எரி! தமிழ்வழங் கிடத்தில் தாய்மொழி வழியாய்த் தமிழர் படிப்பதா பிழை? அமிழ்ந்தவர் எழுந்தால் அயலவர்க் கென்ன? அயர்வதா? நீ, முனைந் துழை! பிறந்தநம் மண்ணில் பீடுறும் தமிழில் பேசுதற் கோ, ஒரு தடை? மறந்த,பண் பாட்டை மறவர்கள் மீட்க மறிப்பவர் எவர்? கொடி றுடை! முத்தமிழ்த்…