ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் : மாணவர்களுக்குப் பாராட்டு
மாணிக்கவாசகம் பள்ளியில் ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் இராசேசு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை கிளையின் சார்பாக…
தேவகோட்டை : சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு
வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு நாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு 2016-2017ஆம் ஆண்டிற்கான குடியரசுநாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியது. தேவகோட்டை குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11 அகவைக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு அசய் பிரகாசு…
மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்!
மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்! மாவட்டக் கல்வி அதிகாரி அறிவுரை தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘கவிதை சொல்லுதல்’ போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி மாணவர்களிடம் மன்பதைக்குப் பயன்படக்கூடிய இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள் எனப் பேசினார். கவிதை சொல்லுதல் போட்டிக்கு வந்தவர்களை மாணவர் சீவா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி மாணவர்களிடம்…
தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11 அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன் முதலிடத்தையும், அதே வகுப்பு மாணவர் சஞ்சீவு இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6 ஆம்…
மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!
மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு! தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் மாணவர் விசய் வரவேற்றார். தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்திரி, உமாமகேசுவரி, தனலெட்சுமி ஆகியோருக்கும், அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சந்தியா நன்றி கூறினார்….
பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?
பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை…
திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்
திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்: நினைவாற்றல் பயிலரங்கம் தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி, நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும்…
மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா
மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்(யோகா) கலந்துகொண்டதற்குப் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கந்தர்சட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் இருந்து…
மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி தேவகோட்டை: – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இளமழலை மாணவர்களுக்குத் தனியாகவும், 1முதல் 3ஆ ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பிரிவாகவும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு,…
மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் அறிவொளி ஏற்றுவிழா
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 210 2016 அன்று நடை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒளியேற்று விழா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒளி…
வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்க!
இளம் மாணவர்கள் வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்ள வேண்டும் வேளாண்மைக் கல்லூரி தலைமையர்(டீன்) பேச்சு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேளாண்மைக் கல்லூரியில் ஒரு நாள் ( 18/03/2016) தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாகச் சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரிக்குச் சென்றனர். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வேளாண்மைக் கல்லூரிக்குக் களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லூரி வணிகப் பிரிவு மேலாளர்…
தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண்ணங்குடி அரசு தொடக்க நல்வாழ்வு நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கூறினார்கள். மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட…