அருளாழி நயந்தோய் நீஇ !
அருளாழி நயந்தோய் நீஇ ! அறவாழி பயந்தோய் நீஇ ! மருளாழி துறந்தோய் நீஇ ! மறையாழி புரந்தோய் நீஇ ! மாதவரில் மாதவன் நீஇ ! வானவருள் வானவன் நீஇ ! போதனரிற் போதனன் நீஇ ! புண்ணியருட் புண்ணியன் நீஇ ! வீரசோழியம், யாப்பருங்கலம் 11 உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188
ஆதி நீஇ ! அமலன் நீஇ !
ஆதி நீஇ ! அமலன் நீஇ ! ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ ! வீரசோழியம்…