நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க முன்னிற்கும் முதன்மையர் உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ, இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ, இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள் இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ, நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம் இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள் பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென் றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚ அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும் ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚ கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚ தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚ தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚ தாய்மொழியைப்…