(ஊரும் பேரும் 63 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சமணமும் சாக்கியமும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் அருங்குன்றம் திருத்தணிகை மலைக்கு ஐந்து கல் தூரத்தில் உள்ளது அருங்குன்றம். அங்குக் காணப்படுகின்ற அழகிய சினாலயம் கார் வெட்டு நகரக் குறுநில மன்னரால் கட்டப்பட்டதென்பர். தமிழ்ச் சிறு காப்பியங்களுள் சிறந்ததாக மதிக்கப்படும் சூளாமணியின் ஆசிரியராகிய தோலா மொழித் தேவர் இவ்வாலயத்தில் அமைந்த தரும தீர்த்தங்கரரை வழிபட்ட செய்தி அந்நூற் பாயிரத்தால் அறியப்படுகின்றது. எனவே, அருகன் குன்றம் என்னும் பெயர் அருங்குன்றமெனக் குறுகிற்றென்று கொள்ளுதல் பொருந்தும். திருநறுங் கொண்டை…