“இது இனப்படுகொலையா? இல்லையா?” – சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!

   இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு,   சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது.   உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை வகிக்க, படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.  படத்தைத் தலைவர்கள் வெளியிட, மாணவத் தோழர்கள் செம்பியன், சோ.பிரிட்டோ முதலானோர் ஆவணப்படத்தைப் பெற்றுக் கொண்டனர்.  உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்தியப்பொதுவடைமைக்…

சாதியும் சமயமும் – ஒரு பன்மய விவாதம் சேலத்தில் முழுநாள் கருத்தரங்கம்!

  “சாதியும் மதமும் – ஒரு பன்மய விவாதம்” என்ற தலைப்பில், சேலத்தில் சித்திரை 05, 2046 / ஏப்பிரல் 18, 2015 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெறுகின்றது.     மாரி தலம், ஆக்கம், நிழல், தளிர்கள், ஐந்திணை வாழ்வியல் நடுவம், சேலம் பேச்சு ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விவாத நிகழ்வு, சேலம் மூக்கனேரி ஏரிப் பகுதியிலுள்ள, மாரி தலத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது.   காலை 10 மணி முதல்…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ

 (ஆவணி 22, 2045 / செப்.07 ,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 5: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்!   1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள உடன்வயிற்றுஉறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவைஇலங்கைக்குத் தானமாகக் கொடுத்தது. அதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரைசிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனதுதவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும்தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்றுஉச்சநீதிமன்றத்திலும்,…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” – தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு

  தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தும் வாழ்வுரிமை மாநாடு காலம்: புரட்டாசி 12, 2045 / 28.09.2014, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இடம்: தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளி உலகத் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், மிகை எண்ணிக்கையில் நுழைந்து குடியேறிக் கொண்டும், கல்வி – வேலை வாய்ப்பு – தொழில் – வணிகங்களை கவர்ந்து கொண்டுமுள்ள அயலார் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் புரட்டாசி 12, 2045 / செப்டம்பர்…

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (ஆடி 5, 2045 -21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரிப் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை முதலான பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றன. தஞ்சை மாவட்டத்தில் வணிகர்களின் ஆதரவோடு முழுமையான கடையடைப்பு நடைபெற்றது. தஞ்சை தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாசி நகரில் இயங்கும் இந்திய அரசின்…