(தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்!” இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு குறித்து இப்படி மொழிந்திருப்பவர் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் திருவாளர் செய்சங்கர். இலங்கைக்கு வந்துள்ள நெருக்கடியிலிருந்து அந்நாட்டை மீட்க இந்தியா எல்லா உதவியும் செய்யும் என்பதைத்தான் செய்சங்கர் இப்படிச் சொன்னார். இது ஒரு புறம் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் மோதியரசு அனைத்து வகையிலும் துணைநிற்கும் என்று தமிழ்நாடு பாசக தலைவர்…