ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12-14. நாடக சம்பந்தமான நூல்கள் தொடர்ச்சி) 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது புத்தகங்களை எழுதி அச்சிட்டது போக நான் எழுத்தாளனாக செய்த சில காரியங்களை இனி எழுதுகிறேன். சென்ற சுமார் 20 வருடங்களாக இந்து (Hindu) பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தமிழிலும் சிறுசிறு வியாசங்கள் எழுதியனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக எனக்கு வருவாயும் உண்டு. பேசும் படங்களுக்குச் சில நாடகங்களை எழுதியிருக்கிறேன். இவையன்றிப் பேசும் படங்களுக்கென்றே இதுவரையில் நான் எழுதிய…