விடுதலைப் பேரொளி பிரபாகரன் 68ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை மாநகர அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டி! முதல் பரிசு: உரூ.50,000/- இரண்டாம் பரிசு: உரூ.25,000/- மூன்றாம் பரிசு:உ ரூ.10,000/- மேலும் 5 ஆறுதல் பரிசுகள் நாள்: 26.11.2022 மாநகர் சென்னையில் மறத்தமிழ் வளர்க்கும் மாணவர் – மாணாக்கியருக்கு அன்பு வணக்கம்! பிரபாகரன் என்பது பெயர் மட்டுமில்லை. அது விடுதலையின் முகவரி. அச்சமின்மையின் அக வரி. பிரபாகரன். ஆவேசம் பொங்க உரையாற்றுகிற பேச்சாளரில்லை. அரிதினும் அரிதான அவரது உரைகளில் சொல்மாயங்கள் இருந்ததில்லை. ஆனால், அவரது சொற்கள்…