சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்
சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது. அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன. அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது. தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது. தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது. சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது. வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது. அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது. தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது. …