நடிப்புத்தலைவர்கள் – பேராசிரியர் அறிவரசன்
துள்ளி எழுக தோழர்களே! பாங்குடன் தமிழை வளர்ப்பதற்குப் பலவும் செய்வோம் என்பார்கள்; ஆங்கில மொழியை வளர்ப்பதற்கே அனைத்தும் செய்து முடிப்பார்கள்! வடமொழி யதனை வழிபாட்டில் வாழ்க்கைத் துணைநல மணவீட்டில் இடம்பெறச் செய்தபின் வடமொழியை எதிர்க்கிறோம் என்றும் சொல்வார்கள்! சாதியை மதத்தை மேடைகளில் சாடித் தமிழர்நாம் என்பார்கள்; வீதியில் வீட்டில் சாதிமத வேற்றுமை பேணி வளர்ப்பார்கள்! ஈழத் தமிழர் எமக்கென்றும் இசைந்த தொப்புள் உறவென்பார்; வாழத் துடிக்கும் உறவுகளை மறந்து மினுக்கித் திரிவார்கள்! ஈழமண் விடுதலை பெறவேண்டும் என்றே எகிறிக் குதிப்பார்கள்; பாழும் அடிமைத் தமிழ்நாட்டில்…