புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மகளிர் விழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். விழாவில் பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர் புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு துணைச்செயலர்…