புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி
(புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர் அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு: ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…
தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 : நன்றியும் பாராட்டும் தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…
மொழி பெயர்ப்போம்! – அருணகிரி
மொழி பெயர்ப்போம்! உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில் உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் இரசிய நாட்டின் நில அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், தொழிலாளர்கள் போராட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பசுமரத்து ஆணி போலப் பதியச் செய்து விட்டன. அப்படி உருவான பல…