ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) 5.குருபக்தியும் ஐயப்பன் அருளும் “பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும்; பகுத்தறிவை வரவேற்கும்; பழமையின் சீர்மை போற்றும்; புதுமையின் பயனை வாழ்த்தும்;தேசியம் பரவும்; செந்தமிழர் தனி உரிமையும் செப்பும்; உத்தமர் காந்தியையும் போற்றும்; சமதர்ம மாவீரன் இலெனினையும் பாராட்டும். ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.” இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார். இக்கூற்றின் உண்மையைப் பெருங் கவிக்கோவின் கவிதைப் படையல்கள்…