என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!-தொடர் ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 4. திருக்கோவையார் உரைநயம் மணிவாசகர் பாடிய இருவாசகங்கள் திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். செவிக்கும் சிந்தைக்கும் இனிக்கும் சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்த திருவாசகத்தைத் “தித்திக்கும் திருவாசகத்தேன்” எனப் போற்றும் புலவர்கள், திருக்கோவையார் எண்ணுவார்-எண்ண விழைவுகளுக்கேற்ப. ஆரணமாகவும், “ஆகமத்தின் காரணமாகவும் அமைந்து ஆயுந்தொறும் ஆராம்பேரின்ப வாரிதியாகும் எனப் போற்றுவர்.கோவையார் பெற்றிருக்கும் இவ்வின்பக்குவியல்களைப் படிப்பார் உள்ளத்தில் கொண்டு சென்று கொட்டுவது, அக்கோவைக்குப் பேராசிரியர் வகுத்திருக்கும் உரையாகும். அவர்…

செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்

செம்மொழிச் சிந்தனை : என்னுரை உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக அமைந்தன. 1986-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் சார்பில் மிகப் பெரியதொரு கருத்தரங்கிற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்…

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளை­யும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு….

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர்

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர் திருக்கோவையார் உரைகண்ட பேராசிரியர் பொதுப்பாயிரம் செய்த ஆத்திரையன் பேராசிரியர் மயேச்சுரர் என்னும் பேராசிரியர் குறுந்தொகை உரையாளர் பேராசிரியர் பேராசிரியர் நேமிநாதர் தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர்

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…

மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்

(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன?…