இலக்குவனார் வணங்கும் கடவுள்
இலக்குவனார் வணங்கும் கடவுள் சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம் மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்! எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும் தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே! – பேராசிரியர் இலக்குவனார்! – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44 தரவு: பாபு கண்ணன்
தமிழே இலக்குவனாரின் மூச்சு!
தமிழே இலக்குவனாரின் மூச்சு! “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44 தரவு : பாபு கண்ணன்