ஒளவையார்:3 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 2: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 12 2. ஒளவையார் (தொடர்ச்சி) வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் வீரத்திலும் நிகரற்ற பெருவிறல் வேந்தனாகக் காட்சியளித்தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானாயின், அத்தேர்க் கால் எத்துணை வலிவுடையதாகும்? அத்துணை உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விளங்கினான் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக்கில்லை; தன்மை தெரியாது,‘இளையன்…