மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே! கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம் ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான். ‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும்…