வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசு கடன் – புலவர் பழ.தமிழாளன்
வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசுகடன் 1. வடபுலத்தார் தமிழ்நாட்டில் வந்துகுடி புகுந்தே வண்டமிழ நாட்டகத்தில் வாக்காளர் ஆயின் விடைகாண முடியாத நிலையாகும் நிலத்தே ஈழநிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடும் தேர்க கடனென்று தமிழ்நாட்டை ஆளுகின்ற அரசு காவிவட வருகையினைத் தடைசெய்து விட்டால் நடமாடும் பண்பாட்டின் தொட்டிலாக விளங்கும் நற்றமிழ இனப்பகையும் நாட்விட்டே ஓடும் ! 2. எம்மதமாய் எச்சாதி எக்கட்சி சார்ந்தே இருந்தாலும் தமிழனென்ற உணர்வு பொங்க வேண்டும் தம்மன்னை தமிழென்ற நினைவோங்க வேண்டும் தம்பகையே ஆரியமாய்த் …
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …
கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்
கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம் நிறைந்ததினால் தில்லை யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச் செந்தமிழர் போற்றுகின்ற சிவனாகும் நடராசர் கோவி லுக்குத் தொல்தமிழ இனம்வந்த முதற்பராந்த கமன்னென்பார் பொன்னும் வேய்ந்தார் / புதுக்கோட்டை மாமன்னர் சேதுபதி மரகதக்கல் ஈந்து மகிழ்ந்தார் // கொல்லைப்புற வழியாக உட்புகுந்த தீச்சிதரும் உரிமை கோரல் / கருநாகம் கரையான்புற் றுரிமை தனைக் கோருகின்ற நிலையே ஒக்கும் // வல்லடியாய் வழக்காடு தீச்சிதரை …
கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்
கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? இறையுறையும் கோவில்கட்ட இயன்ற வரை பொருளீந்தோர் தமிழ ரன்றோ ? எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும் கருவறையும் புறமும் உள்ளும் முறையாகப் பணிபுரிந்தோர் முத்தமிழ்த் தாய் ஈன்றெடுத்த சேய்க ளன்றோ ? முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய் எப்பணியும் செய்யா நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள் உட்புகுந்தே தில்லையிலே போடும் கொட்டம் காணக்கண் கூசுகின்ற காட்சியதைக் காணுங்கால் கரையான் தன்வாய் // உறைவதற்கே உழைத்தெடுத்த புற்றி …