சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!

சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. நடைபெறும் இடங்கள்: 1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி [Kohana International school,Kawasaki] 2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய் [Seishinchou community…

பொங்கல் விழா 2047 / 2016, கனடா

  தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல்  பிற்பகல் 02.00 வரை   கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…

செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்!

செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்! நண்பர்களே,   ஊருக்குச் செல்ல வாய்ப்பற்றவர்கள், ஊருக்குச் சென்றாலும் செம்மைக் குடும்பங்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட விரும்புவோர் அனைவரும் செம்மை வனத்திற்கு வரலாம்.   மரபுவழிப்பட்ட வகைகளில் பொங்கலைக் கொண்டாடுவோம். செம்மண் காட்டு ஓடையில் குளிக்கலாம், புதர்க் காடுகளில் திரியலாம், செம்மை வனத்தில் அமைதி நிலை உணரலாம், எந்த பேதமும் பாராமல் ஆடலாம் பாடலாம்.   தை 1, 2 (சனவரி 15, 16) இரு நாட்களும் கொண்டாட்டம் நிகழும்.   கட்டணம் ஏதுமில்லை. இணைப்பில்…

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்   பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு.   மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன….

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா

  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா பிப்ரவரி  முதல் நாளன்று  மலைத் தோற்ற(மவுன்டைன் வியூ) உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  1100-க்கும்  மிகுதியான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் திருநாளை அட்லாண்டா மக்கள் வியக்கும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்கு, இவ்வளவு மக்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளை, அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். “தமிழன் என்று சொல்லடா,…

(உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா

கிகாலி : (உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல்  நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா  மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய  நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள்,  பெண்கள், இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகைச்சுவை நாடகம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.  விழா நிறைவில்  வாழை…

இன்ஃபோசிசு பொங்கல்விழா

இன்ஃபோசிசு(மகநே்திர நகரில்) பொங்கல் விழாக் காட்சிகள்   செங்கல்பட்டு அருகே அமைந்த மகேந்திரநகரில் உள்ள இன்ஃபோசிசு நிறுவனத்தில் 21.01.14 செவ்வாய் அன்று தமிழர் திருநாளாகிய பொங்கல்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  அன்று காலை அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் மேளதாளத்துடன் வரவேற்று உற்சாகமாக விழா தொடங்கப்பட்டது. பொங்கல்  வைப்புப் போட்டி, கோலப்போட்டி, பம்பரப்போட்டி, உறியடிப் போட்டி ஆகியனவற்றில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாலை மதுரை ஐயா கலைக்கூடத்தினரின் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம் முதலான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  அனைவரும் உற்சாகத்துடன்…