பொங்குக புதுமை! -அறிஞர் அண்ணா
பொங்குக புதுமை! ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம். தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற…