கலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/chicken பொதிபொரி-puff
43 : வாட்டூன்-roasted mutton/chicken; பொதிபொரி-puff பொரித்தலும் வறுத்தலும் (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching (வேளா., பயி., மனை., கால்.); fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சு பொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறு வகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்த கறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு…