இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி) தமிழர் வீரம்வீர மாதர் வீரத் தாய்தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். வாளெடுத்த தாய்வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன்…
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 மக்களுக்கும் மன்னருக்கும் நாட்டுப்பற்று என்பது கருவிலே வாய்ந்த திருவாக இலங்கியது. மக்கள் அனைவரும் அவரவர் கடமையை நன்கு ஆற்றி நாட்டைப் புரத்தலே அவர் தம் தலையாய பணியெனக் கருதினர். குழந்தைகளைப் பெற்று நன்கு வளர்த்தலே தன் கடமையென அன்னை எண்ணினாள். எல்லா நற்குணங்களாலும் நிறைந்த பெரியோராக்குதல் தன் கடன் எனத் தந்தை நினைத்தான். படைக்கலன்களைப் படைத்துக் கொடுத்தல் தன் பங்கு எனக் கொல்லன்…
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…