பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 16.பெருவாழ்வு வேண்டின் குறள்நயம் பேணித் திருவுடன் வாழ்தல் திறம். 17.வாழ்வாகி மெய்யாய் வளரொளியாய் நெஞ்சினில் வாழும் குறளை வழுத்து. 18. தேடுகின்ற மெய்ப்பொருள் யாவும் குறள்நூலில் ஓடிவந்து நிற்கும் உணர். 19. வள்ளுவன்சொல் ஓவியம் வண்ணமாய்த் தீட்டுவார் தெள்ளிய நெஞ்சுடை யார். 20. எப்பாலும் ஏற்கும் எழிலான இன்குறளைத் தப்பாமல் கற்போம் தெளிந்து. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15: தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 குன்றாப் புகழும், குறையா வளமும் என்றும் குறளால் வரும். இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத் திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து. பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள் இருளற ஓதுவோம் இனிது. முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின் எக்காலும் வாழ்வோம் இனிது. முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும் எப்போதும் ஏத்துவம் ஏற்று. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி -98415 93517.
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10 நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து. குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து. போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு. குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…