இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் – ஐயூர் முடவனார் , புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33. காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34. மலைத்தலைய கடல்…
மருத நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்
மருத நிலத்தார் உணவு சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன. மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217. ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195). தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்;…