பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்

பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன்   பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின்…

பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார்

  பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1) “முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை…