(அதிகாரம் 075. அரண் தொடர்ச்சி) 02. பொருள் பால்     09. பொருள் இயல் (கூழ் இயல்) அதிகாரம் 076. பொருள் செயல் வகை. செல்வத்தின் தன்மை, தேவை, சிறப்பு, திரட்டும் வழிமுறைகள்.   பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும்    பொருள்அல்ல(து), இல்லை பொருள்.   மதிப்பு இல்லாரையும், மதிப்பு உள்ளாராக மாற்றுவது செல்வமே.   இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை,    எல்லாரும் செய்வர் சிறப்பு.            செல்வம் இல்லாரை, எல்லாரும் இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார்.   பொருள்என்னும் பொய்யா விளக்கம்,…