சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை(திருவள்ளுவர், திருக்குறள் 541). மணிமேகலை வகுத்தாற்போல் சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக ஆக்குவதைத் தமிழ்நாட்டு அரசாள்வோர் நெறியாகக் கொண்டனர் அன்று. சிறைக்கூடங்கைளக் கொலைக்கூடங்களாக மாற்றுகின்றனர் இன்று. சிறையில் தாக்குதல் அல்லது கலவரம் என்பது எல்லா நாட்டுச் சிறைச்சாலைகளிலும் அரங்கேறும் அவலம்தான். ஆனால், இவை பொதுவாக இரு குழுக்களிடையே அல்லது வெளியே உள்ள குழு ஒன்றின் தூண்டுதலால் நடைபெறுவதாகத்தான் இருக்கும். அல்லது சிறைச்சாலை அடக்கு முறைக்கு எதிராகச் சிறைவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பர். ஆனால், …