தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு
தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை என் தேசத்தின்… என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு… பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது…. குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல்…