திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 016. பொறை உடைமை
(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 016. பொறை உடைமை பிறரது பிழைகளை — குற்றங்களைப் பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும் நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க. பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை மறத்தல், அதனினும் நன்று. வரம்பு கடந்த குற்றங்களையும் பொறுத்தலினும், மறத்தலே நன்று. …