புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை!
புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக ! அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்! புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தீமைகள் பெரும்பான்மை மக்கள் மொழியான தமிழுக்கும் வரலாற்றுக்கும் விளைவிக்கப்பட்டுள்ளன. ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்காமல் பிரஞ்சு மொழியில் மட்டும் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைமாற்றித் தமிழில் மட்டும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். தேவைப்பட் டால் சிறிய அளவில் ஆங்கிலத்தில் இருக்குமாறு உருவாக்கலாம்….