தமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர்!   தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம்…