(தோழர் தியாகு எழுதுகிறார் 29: தொடர்ச்சி) பொ.ந.பி. இட ஒதுக்கீடும் பாண்டேயின் கவனப் பிசகும் பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான (EWS – பொ.ந.பி.) இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் குறித்தும், அதனை செல்லுபடியாக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய இணையவழிச் (Zoom) சிறப்புச் செய்தி அரசியல் நிகழ்வில் முன்னாள் நீதியர் அன்புக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் விரிவாக உரையாற்றியதோடு, பங்கேற்பாளர்கள் கேட்ட வினாக்களுக்கும் தெளிவாக விடையளித்தார். இங்கே நான் ‘பொநபி’ இட ஒதுக்கீடு…