போகிக்கு விடுமுறை விடுக! பொங்கல் விழா என்பது பொங்கல் நாளை மட்டும் குறிப்பதில்லை. பொங்கலுக்கு முதல்நாளான போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் 4 நாள் தொகுப்பாகும். போகி என்பதும் தமிழர்க்குரிய சிறப்பான பண்டிகை நாளாகும். சுற்றுப்புறத் தூய்மைக்கும் மனைத் தூய்மைக்கும் நல வாழ்விற்கும் அடிப்படையான பண்டிகையாகும். பண்டுதொட்டு (முற்காலம் முதல்) – கொண்டாடப்படுவது பண்டிகை எனப்பட்டது. பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நாளே போகியாகும். வீட்டிலிருந்து குப்பைக் கூளங்களையும் பயனற்றுப் போனவற்றையும் நைந்த கிழிந்த சிதைந்த…