காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…
கண்டுபிடி! விடுதலை செய்! சதிக்கு முடிவு கட்டு! – ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள்
வருகிற ஆவணி 14, 2047 / ஆகத்து 30 ஆம் நாள் அன்று, உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழமண்ணில் வாழவழியின்றித் தவிக்கும் தமிழர்களிடையே, காணாமல் போனவர்களைக் கண்டுபிடி! தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்! நஞ்சூட்டப்பட்ட மேனாள் போராளிகளைக் கொலை செய்யும் சதிக்கு முடிவு கட்டு! என ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள். நாமும் பல்வேறு வகைகளில் இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்த, தெருவுக்கு வருவோம். அன்புள்ள தமிழினியன். அமைப்பாளர் தமிழீழ மக்கள் தோழமை மையம். 345அ, வந்தவாசி சாலை மாத்தூர் வெம்பாக்கம்…
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தன்நிறைவும் கொண்டவையே – இராம் சிவலிங்கம்
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தனித்துவமானதும் தன்நிகரற்றதும் மட்டுமல்ல! தன்நிறைவும் கொண்டவையே — கலாநிதி இராம் சிவலிங்கம் விடுதலை இந்தியாவுக்கான அறவழிப் போராட்டத்தின்போது, அதன்மகிமையை உணர்ந்த பிரித்தானிய அரசு, மாண்புடன் செயற்பட்டதால், இந்தியாவின் விடுதலை உறுதியானது. எமது அறவழிப் போராட்டம், அதன் தன்மையை மதியா சிங்கள அரசின்அடிதடிக்கு உள்ளாகி, இரத்தம் தோய்ந்த போராட்டமாக மாற்றம் பெற்றது. அன்பை ஆயுதமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தில், நாம் பொறுப்போடுநடந்ததால், இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றோம். உள்நாட்டு மோதல்,இலங்கை-இந்தியச்சிக்கலாக மாற்றம் பெற்றது. அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக ஆயுதம் ஏந்துவதும்ஓர்அறவழிப் போராட்டமே…