நெடுஞ்சேரலாதனின் போர்முறை – மயிலை சீனி.வேங்கடசாமி
நெடுஞ்சேரலாதனின் போர்முறை ‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’1 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’2 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம். இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;3 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;4 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.5 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.6 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.7 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.8 படைகளைத் தழுவிச் செல்லும்…