இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! – பெ. மணியரசன்
இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை; இந்தி பேசுவோர் இந்தியாவில் ஆளும் இனம்; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதோர் இந்தியாவில் ஆளப்படும் இனம் – என்பதை இந்திய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப நிலைநாட்டி வருகிறார்கள். இந்தி மொழி இந்தியாவில் நடுவண் அரசில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஆட்சி மொழி; மற்ற மொழிகள் இந்தி மேலாதிக்கத்தின் கீழ் இடைக்கால பேச்சு மொழியாய் இருக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாபு(முகர்சியின்) கையொப்பத்துடன் மேற்கண்ட கூற்றுகள் சட்டமாகவும் நடுவணரசின் நடைமுறைகளாகவும் இப்போது வருகின்றன….
நல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளியீட்டு விழா
‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நூல் வெளியீட்டு விழா முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை, இராசரத்தினம் கலையரங்கில் மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 அன்று நடைபெற்றது. முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார். மு.க.தாலின், தன்னுடைய வெளியீட்டுரையில், “தமிழை – தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். ‘தமிழ்படும்பாடு’ என்று 9 நூல்களை…
பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு
பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கும் துயரங்களுக்கும் காரணமான ஒருவனைத் துணிவுடன் செருப்பால் அடித்துள்ளார் பிரபாகரன் என்னும் இளைஞர். பிரபாகரன் என்னும் பெயர் செய்த மாயம்போலும் இத்துணிவு அவருக்கு வந்துள்ளது. இதுகேட்ட உலகத்தமிழர்கள் உவகை கொள்கின்றனர். ஆனால், செருப்படி பெற்ற நாராயணன் தண்டிக்கப்பட வேண்டிய ஆள்தான் என்றாலும் செருப்பால் அடித்தது தவறுதான் என்கின்றனர் ஒரு சாரார். செருப்படிகொடுத்தது தவறுதான்! பிராமணர் தெருவில் ஒடுக்கப்பட்டடவர் செல்லக்கூடாது என்ற தீண்டாமைக்கு எதிராகச் செயல்பட்ட, மகப்பேற்றிற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட பெண்ணைப்…