பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7 தொல்காப்பியம் முழுமைக்கும் தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்” கட்டுரை மூலம்…
கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள் – ப. சுதா
அன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார். பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு உருவு நிறுத்த காமாவயில் நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்.பொருள்.மெய்ப்.269) என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும்…