முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை: முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம்,…