தோழர் தியாகு எழுதுகிறார் 187 : ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு!
(தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)- தொடர்ச்சி) ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு! 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால்தான்…