(தோழர் தியாகு எழுதுகிறார் 92 :மறதிச் சேற்றில் புதைந்து போகாமல் – தொடர்ச்சி) இறையூர் இழிவு இனிய அன்பர்களே! சிபி வினவுகிறார்: இறையூர் பட்டியலினத்தவர் பகுதியிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வினைக் குறித்துத் தங்களின் கருத்தென்ன தோழர்? கண்டிக்கிறேன், வேதனைப்படுகிறேன், இந்த இழிசெயல் புரிந்த தமிழ்க் குமுகத்தில் நானும் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. திண்ணியம் கொடுமை பற்றியும் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் அந்த நேரத்தில் தமிழ்த் தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரையை விரைவில் தாழியில்…