சதுரங்கத்தில்அருவினை புரிந்த மகாராசன்  கண்களைக் கட்டிக்  கொண்டு விளையாடிய 10 ஆம் வகுப்பு மாணாக்கர்  29  நிமையத்தில் பதின்மரைத் தோற்கடித்தார்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  இமயம்(எவரெசுட்டு) மாரியப்ப (நாடார்) மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மகாராசன்.  இவர் கண்ணை கட்டிக்கொண்டு சதுரங்கம்விளையாடுவதில் உலக அருவினை ஆற்றியுள்ளார். இவரது இரு கண்களிலும் பஞ்சுகள் வைத்து, கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். பின், எதிரில் விளையாடு பவர் நகர்த்தும் காய்களுக்கு ‘ஏ’ முதல் ‘எச்’ வரையிலான ஆங்கில எழுத்துக்கள் மூலம் 8 எண்களில்  குறிச்சொற்கள் தரப்பட்டன….