பொள்ளாச்சியார் திருந்தமாட்டாரா? தமிழ்க்கொலையை நிறுத்த மாட்டாரா?
பொள்ளாச்சியார், வள்ளலார் கொள்கையைப் பரப்பும் அருள் உள்ளம் கொண்டவர். ஆனால், தமிழ்த்தாய்மீது அருள் இல்லாதவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நெறி பரப்புபவர், அயல்மொழிகளால் வதைக்கப்பட்டு வாடும் தமிழன்னை மீது பரிவு காட்ட வேண்டாவா? மாறாகத் தமிழைப் பாராட்டி ஆரியத்தை முன் நிறுத்துவதையே கொள்கையாகக் கொண்டவர். ஆரியத்தை அடைவதற்குரிய பாதைதான் தமிழ் என்பது அவரது வழிமுறை. தமிழ்க் கோப்பையில் ஆரிய நஞ்சு தருவதில் வல்லவர். எனவே, அவரிடம் இதனை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால், அவரின் நெருங்கிய வட்டம் தமிழ் எழுத்துவடிவங்களைச்…