(தோழர் தியாகு எழுதுகிறார் 65 தொடர்ச்சி) தோழர் மகிழன் வேண்டுகோள்: கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்! இனிய அன்பர்களே! வணக்கம். இது தாழி மடல் – 40. நமக்கு ஒரு நாளிதழ் வேண்டும் என்று சொல்லி அதன் முன்னோடியாகத்தான் தோழர் தியாகு இம்முயற்சியைத் தொடங்கினார். அவரது உழைப்பாலும் உங்களின் ஒத்துழைப்பாலும் தாழி தொடர்ந்து மலர்கிறது. எவ்வளவு இடர்ப்படினும் நாள் தவறாமல் தாழி மடல் உங்கள் கைக்கு வரும் என்பதில் ஐயம் வேண்டா. தாழி மடலின் முகன்மை எழுத்துகளை அச்சிலேற்றி நூல்வடிவாக்க வேண்டும் என்ற முன்மொழிவும் உள்ளது. இதே போல்தான் ஈராண்டுக்கு மேலாக “தமிழ்நாடு இனி” இணைய வழி…