செங்கொடியூர் சென்று வந்தேன்! நீங்கள்….தமிழ் இராசேந்திரன்
தமிழ் உணர்வாளர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய தமிழ்க் கோயில்….. தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து 6 புதுக்கல் தொலைவில் உள்ள , நேர்மை மிகு ஆட்சிப் பணியாளர் உ.சகாயம் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள, ஒரே சமையல் , ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து பெருங்கூட்டுக் குடும்பமாக வாழுகிற, பொது உடைமை வாழ்வு (Community Life) என்ற அடிப்படையில் இயங்குகிற, திருமணத்தை மற்றவர் நலனுக்காகப் புறக்கணித்து, முதிர் கன்னியாக, ஈக வாழ்வு நடத்தும் மகேசு என்ற நேர்மையின் இலக்கணமாக…