299 உரூபாயில் இணைய ஊழியம் – தமிழ்நாடு அரசு தொடக்கம்
299 உரூபாயில் 2 மாப்பேரெண்மம் (கிகாபைட்டுக்கு) இணைய ஊழியம் தமிழ்நாடு அரசு தொடக்கம் தமிழ்நாடு அரசு வடக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் இணையம் திட்டம், மாணவர்களுக்கான திரள்கணினி- இணையப் பதிவேற்ற சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் செயலலிதா அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி (cable t.v.) நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் மீவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணையச் சேவைகள் (Internet…
ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி
ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி உறுதிமொழி! “ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை – எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்” என்று அன்புமணி இராமதாசு கூறினார். சென்னை வண்டலூரில் மாசி 15, 2047 / பிப்பிரவரி 27 ஆம் நாள் அன்று நடைபெற்ற பா.ம.க மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினரும், பா.ம.க முதல்வர் வேட்பாளருமான அன்புமணி இராமதாசு பேசியதாவது: “இது வரலாறு படைக்கின்ற மாநாடு….
கைலாசநாதர் கோயிலில் பிறந்தநாளுக்கான பூசை
பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் மக்கள் முதல்வரின் 67 ஆம் பிறந்தநாளுக்கான பூசை மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கைலாசநாதர் கோயிலில் மாவட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்பாசறை சார்பாகச் சிறப்பு பூசை செய்யப்பெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஒ.ப.இரவீந்திரநாத்துகுமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஒ.இராசா, மாவட்ட எம்ஞ்சியார் அணி இளைஞர் செயலர் எல்லப்பட்டி முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் முருகானந்தன், நகரத் துணைச் செயலர் அப்துல்சமது, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ஏ.சி.சிவபாலு, தொழிற்சங்கச்…