தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது  வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன :  – முன்னாள் போராளி சான்றுரை  இனப்படுகொலைப் போரின் பின்னரான  மறுவாழ்வின்போது தமக்கு  வேதிய(இரசாயனம் கலந்த) உணவுகள் வழங்கப்பட்டதோடு  ஐயத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சான்றுரைத்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும்…